• முகப்பு பக்கம்
  • Sponsor
  • ஆசிரியர் பற்றி
  • அணிந்துரை
  • கொங்கு வேளாளர் குலங்கள்
  • தொடர்பு கொள்ள
  • குலங்கள் - குலதெய்வங்கள்
  • திருமணங்களும் - குலங்களும்
  • சேர்ப்பதற்கு
   

தமிழறிஞர் தெய்வத்திரு. சிலம்பொலி செல்லப்பனார்

   தொகுப்பாசிரியர் பற்றி  -  முனைவர் மணிமேகலை புஷ்பராஜ்

     
   தமிழறிஞர் தெய்வத்திரு. சிலம்பொலி செல்லப்பனார்- தெய்வத்திருமதி. செல்லம்மாள் தம்பதியரின்மகளாக நாமக்கல் மாவட்டம், சிவியாம்பாளையம் கிராமத்தில் பிறந்தவர் மணிமேகலை. தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தெய்வத்திரு. நாராயணசாமி கவுண்டர்- திருமதி பாப்பம்மாள் தம்பதியரின் மகனான பொறிஞர்  நா.புஷ்பராஜ் இவருடைய கணவர் ஆவார்.
     
  திருமதி மணிமேகலை பி.ஏ., (பொருளாதாரம்), எம்.ஏ., (தமிழ்), பிஎச்.டி (தமிழ்) பட்டங்கள் பெற்றார். கொங்கு வேளாளர் திருமணச் சடங்குகள் என்ற தலைப்பில் ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். 1999ஆம் ஆண்டு இயற்கை எய்திய மூத்த மகன் பாவேந்தன் நினைவாகத் தொடங்கப்பட்ட ‘பாவேந்தன் நினைவு அறக்கட்டளை’யின் செயலாளராய்ப் பணியாற்றி வருகிறார். சென்னை கொங்கு நண்பர்கள் சங்கத்தில் 20 ஆண்டுகள் செயற்குழு உறுப்பினராய் உள்ள இவர், ‘சிலம்பொலி செல்லப்பன் சிலப்பதிகார அறக்கட்டளை’ செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.  
     
  தன் தந்தையார் தெய்வத்திரு. சிலம்பொலியார் பல்வேறு நூல்களுக்கு அளித்துள்ள 1000க்கும் மேற்பட்ட அணிந்துரைகளுள் பலவற்றைத் தொகுத்து “சிலம்பொலியார் அணிந்துரைகள்” என்ற தலைப்பில் ஆறு தொகுதிகளை வெளியிட்டுள்ளார். இதுவரை பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.  
     
  அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்ற தமிழ்க் கருத்தரங்குகளில் பேராளராகக் கலந்து கொண்டவர். செந்தமிழ்ச்செல்வி, தமிழ்நிதி முதலான பட்டங்களைப் பெற்றுள்ளார்.  
     
  இவரது இளைய மகன் திரு. கிருபா புஷ்பராஜ், B.E.,M.S. (USA), J. D.,, பட்டங்கள் பெற்று,அமெரிக்காவில் காப்புரிமை சட்ட வல்லுநராகவும், Square நிறுவனத்தின் சட்டப்பிரிவு இயக்குநராகவும், அமெரிக்காவில் புகழ் பெற்று விளங்கும் StanFord பல்கலைக்கழகத்தில் பகுதி நேரச் சட்டப்பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார். கலிபோர்னியா மாகாணத்தின் ‘Super Lawyer Rising Star’ விருதைப் பெற்ற சிறப்புப்குரியவர். NAPABA (National Asian Pacific American Bar Association) எனும் அமைப்பு 2016 ஆம் ஆண்டு ‘Best Lawyer Under 40 Award’ - எனும் விருதை இவருக்கு வழங்கியது. இவருடைய மனைவி டாக்டர் இமயா, டாக்டர். க.அன்பழகன் - திருமதி செந்தாமரை இணையரின் மகளாவார். இவர் M.D. (Child Psychiatry) மற்றும் Fellowship முடித்து, கலிபோர்னியா மாகாணத்தில் சேண்ட்டா கிளாரா நகரில் மருத்துவராகப் பணிபுரிகிறார். இத்தம்பதியருக்கு வெற்றி எனும் ஆண் குழந்தையும், வீரா எனும் பெண் குழந்தையும் உள்ளனர்.  
     
  தமிழ்ப் பணி, சமுதாயப் பணி, அறக்கட்டளைப் பணி ஆகியவற்றில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளார், திருமதி மணிமேகலை.  

 ---------------------------------------------------------------------------------      Copyright @ dharmapurikongu.com   -------------------------------------------------------------------------