• முகப்பு பக்கம்
  • Sponsor
  • ஆசிரியர் பற்றி
  • அணிந்துரை
  • கொங்கு வேளாளர் குலங்கள்
  • தொடர்பு கொள்ள
  • குலங்கள் - குலதெய்வங்கள்
  • திருமணங்களும் - குலங்களும்
  • சேர்ப்பதற்கு

                                                                                                                      கொங்கு வேளாளர் குலங்கள்


  கொங்கு வேளாளர் குலங்கள் 60, 90, 120 என வளர்ந்து தற்போது 160 ஆகியுள்ளன. 18ஆம் நூற்றாண்டிற்குரிய அழகுமலைக் குறவஞ்சியில் 142 குலங்கள் கொண்ட பட்டியல் கீழ்க்காணுமாறு உள்ளது.  
     
அழகன் அந்துவன் அவுரியன் அக்னி
அனகன் ஆடை ஆதி ஆதிரை
ஆதித்ரேயகும்பன் ஆந்தை ஆவன் இந்திரன்
ஈஞ்சன் உவணன் உழவன் எண்ணெய்
ஒழுக்கர் ஓதாளர் கடுந்துவி கணக்கன்
கண்ணந்தை கண்ணன் கம்பகுலத்தான் கருங்கண்ணன்
கவளன் கவுரி களிஞ்சி கணவாளன்
காடான் காடை காரி காவலர்
கிளியன் கீரன் குங்கிலி குணியன்
குணுக்கன் குண்டெலி குமரந்தை குயிலன்
குழாயன் கூறை கூறுபன் கொட்டாரர்
கொற்றந்தை கோடரங்கி கோவலர் கோவேந்தர்
சவுரியன் சணகன் சாகாடை சாத்தந்தை
சாத்துவராயன் சிலம்பன் சுரபி சூரியன்
சூலன் செங்கண்ணன் செங்குண்ணி செம்பன்
செம்பூத்தன் செவ்வாயன் செல்லன் சேடன்
சேரன் சேரலன் சேவடி சோதி
சோமன் தக்கவன் தவளையன் தழிஞ்சி
தனஞ்சயன் தனவந்தன் துந்துமன் தூரன்
தேமான் தேவேந்திரன் தோடை தோரக்கன்
நந்தனர் நாரை நீருண்ணி நீலன்
நெய்தலி நேரியன் பஞ்சமன் படுகுண்ணி
பண்ணை பதரி பதுமன் பயிரன்
பரமன் பவளன் பனையன் பன்னன்
பாணன் பாம்பன் பாலியன் பன்னன்
     
  செல்லன், விழியன், கண்ணன், பனையன், மணியன் குலத்தவர்களில் சிலர் மட்டும் சேலம் ஆத்தூர், இராசிபுரம், நாமகிரிப்பேட்டை உள்ளிட்ட சில பகுதிகளில், கொங்கு நாட்டு வேளாளர் (நாட்டுக் கவுண்டர்) எனத் தனிப்பிரிவாக வாழ்ந்து வருகின்றனர். அப்பிரிவினரின் குலப்பெயர்கள் பின்வருமாறு:  
     
  1. பருத்திப்பள்ளி செல்லன் குலம்
2. ராசிபுரம் விழியன் குலம்
3. மல்லசமுத்திரம் விழியன் குலம்
4. திண்டமங்கலம் விழியன் குலன்
5. மோரூர் கண்ணன் குலம்
6. மொளசி கண்ணன் குலம்
7. வெண்ணந்தூர் கண்ணன் குலம்
8. ஏழூர் பண்ணை குலம்
9.வீரபாண்டி மணியன் குலம்

 
     
  நாட்டுக் கவுண்டர்களும் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் என்பதின் ஒரு பகுதியேயாகும்.  
     
  ஒவ்வொரு கூட்டத்தாரும் ஒரே தெய்வத்தைக் குல தெய்வமாக வழிபட்டு வந்தனர். குலங்களின் எண்ணிக்கை 60, 90 எனத் தொடங்கித் தற்போது 160 குலங்கள் உள்ளன எனக் கொங்குக் குல ஆய்வாளர் புலவர் செ. ராசு அவர்கள் கூறுகிறார். மக்கட்தொகைப் பெருக்கத்தாலும், கொங்கு வேளாளர்கள் பல்வேறு இடங்களிலும், ஊர்களிலும் நகரங்களிலும் விரிந்து பரந்து வாழ்ந்து வருதலாலும் ஒரு குலத்தார், ஒரே குல தெய்வத்தைக் கொண்டிருந்த நிலை மாறி, தற்போது ஒரு குலத்தாரே வெவ்வேறு குல தெய்வங்களைக் கொண்டுள்ளதைக் காணலாம். அதேபோல், ஒரே குலதெய்வத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட குலத்தார் வழிபடுதலையும் காண்கிறோம். எனவே ஒரு குலதெய்வக் கோயிலுக்குச் செல்பவர்கள் அனைவரும் ஒரே குலத்தார் அல்ல. அதேபோன்று, ஒரு குலத்தவருக்கு ஒரே குல தெய்வம்தான் என்பதும் ஏற்புடையதன்று. பெரும்பாலும், குல தெய்வம் ஏதாவது ஓர் அம்மன் வடிவமாக இருப்பதைக் காணலாம்.  
     
  ஒரு கொங்கு வேளாளருக்கு, குலதெய்வம் வேறு, இஷ்ட தெய்வம் வேறு என இருக்கலாம். எடுத்துக்காட்டாக, தருமபுரி மாவட்டம் கோபிநாதம்பட்டியில் அமைந்திருக்கும் பெருமாள்கோவில், (கோபிநாத சாமி), தீர்த்தமலையில் உள்ள தீர்த்தகிரீஸ்வரர், அரூர் கொங்கம்பெருமாள், பெத்தூர் பெருமாள், மருக்காலம்பட்டி பெருமாள், மொரப்பூர் சென்னகேசவ பெருமாள், பாப்பிரெட்டிப்பட்டி கூத்தாண்டவர் ஆகியவை ஒன்றுக்கும் மேற்பட்ட கூட்டத்தாருக்கு இஷ்ட தெய்வமாக இருப்பதைக் காணலாம். எனவே ஒரு கொங்கு வேளாளரை அடையாளப்படுத்துவது அவருடைய குலம், குலதெய்வம், இஷ்டதெய்வம் ஆகியனவாகும்.  

 ---------------------------------------------------------------------------------      Copyright @ dharmapurikongu.com   -------------------------------------------------------------------------