• முகப்பு பக்கம்
  • Sponsor
  • ஆசிரியர் பற்றி
  • அணிந்துரை
  • கொங்கு வேளாளர் குலங்கள்
  • தொடர்பு கொள்ள
  • குலங்கள் - குலதெய்வங்கள்
  • திருமணங்களும் - குலங்களும்
  • சேர்ப்பதற்கு

                                                                                                      திருமணங்களும் குலங்களும்


  கொங்கு வேளாளர் கூட்டப் பிரிவுகள் (குலப்பிரிவுகள்) நூற்றுக்கும் மேற்பட்டவை உள்ளன. ஓரு கூட்டத்தார் மற்றொரு கூட்டத்தாருடன் திருமண உறவு கொள்வது மரபு. ஒரே கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் பங்காளிகள் எனப்படுவர். அதாவது உடன்பிறப்பு முறையுடையவர். கூட்டம் என்பது ஓர் ஆண் மூதாதையின் சந்ததியினர் என்ற பொருளில்தான் கொங்கு வேளாளரிடையே வழங்கி வருகிறது.  
     
  ஒரு குலத்தைச் சார்ந்தவர்களிடையே திருமண உறவு நடைபெறுவதில்லை. மேலும் திருமணங்கள் நிச்சயிக்கும் போது முக்கியமாக இன்னொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது திருமணம் செய்துகொள்ளும் பெண்ணும், ஆணும் வெவ்வேறு குலத்தினராக இருப்பது அவசியம் என்பதோடு, பெண்ணின் அம்மாவும், ஆணின் அம்மாவும் சகோதரிகளாக இருக்கக் கூடாது.  
     
 

எனவே திருமணம் நிச்சயிக்கும்போது, ஆண்கள் வழியில் பங்காளிகளாக இருக்கக்கூடாது என்பதோடு, பெண்கள் வழியில் (ஆணின் அம்மாவும் பெண்ணின் அம்மாவும்) சகோதரிகளாகவும் இருக்கக்கூடாது.

 
     
     

 ---------------------------------------------------------------------------------      Copyright @ dharmapurikongu.com   -------------------------------------------------------------------------